ஆன்மீக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

மேல்மருவத்தூர் ஆன்மீக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நடைபெற்றது.;

Update: 2024-04-29 11:53 GMT

மேல்மருவத்தூர் ஆன்மீக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நடைபெற்றது.


செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடியில் ஆன்மீக மக்கள் தொகை இயக்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. ஆன்மீக மக்கள் தொண்டு இயக்கம் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட பகுதிகளில் கோடை காலத்தில்,பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் பந்தல் திறந்து அங்கு வரும் பொது மக்களுக்கு இளநீர், மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய், நுங்கு, உள்ளிட்டவைகளை ஆன்மீக இயக்க தொண்டர்கள் வழங்கி வருகின்றனர்.

Advertisement

அதன் ஒரு பகுதியாக மேல்மருவத்தூர் ஆன்மீக மக்கள் தொண்டு இயக்க தலைவர் கோ.ப.அன்பழகன் ஆலோசனைப்படி, ஆன்மீக மக்கள் தொண்டு இயக்கம் இரண்டாம் நிலை தலைவர் சதீஷ்குமார் தலைமையில்,இரண்டாம் நிலை தலைவர் மு.சுந்தரம் முன்னிலையில், உயர்மட்ட குழு பலராமன் ஏற்பாட்டில், ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீர் மோர் பந்தல் திறந்தனர். இதில் தினமும் 500-க்கும் மேற்பட்டோர் இளநீர், மோர், உள்ளிட்டவைகளை அருந்தி தாகம் தீர்த்து வருகின்றனர்.

Tags:    

Similar News