ஜெயலலிதா பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2024-05-01 08:41 GMT

தண்ணீர் பந்தல் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் கே.பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்டச்செயலாளர் தூசி மோகன், முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு தர்பூசணி, வாழைப்பழங்கள், மோர் மற்றும் குளிர்பானங்களை வழங்கினர்.
Tags:    

Similar News