முதுநிலை, பிஎச்டி உயர் படிப்பை வெளிநாடுகளில் தொடரும் பழங்குடியினருக்கு ஊக்க தொகை
2024-25 ஆம் ஆண்டிற்கான முதுநிலை, பி.எச்.டிமற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பை வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியினருக்கு ஊக்க தொகை நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Update: 2024-05-18 02:22 GMT
நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்திய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் அறிவிப்பில் 2024-25 ஆம் ஆண்டிற்கான முதுநிலை, பி.எச்.டி (Ph.D) மற்றும் முனைவர் ஆராய்ச்சி உயர் படிப்பை (National Overseas Scholarship Scheme (NOS)) வெளிநாடுகளில் தொடர தேர்ந்தெடுக்கப்படும் பழங்குடியின வழங்கப்படுகிறது. மாணாக்கர்களுக்கு ஆர்வமுள்ள பழங்குடியினர் கல்வி உதவித்தொகைக்கு மாணாக்கர்கள் இணையவழியில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. https://overseas.tribal.gov.in/ . விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள்:31.05.2024. மேலும் விவரங்களுக்கு போர்ட்டலைப் பார்வையிடலாம். https://overseas.tribal.gov.in/ என தெரிவிக்கப்பட்டுள்ளது.