தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.;
Update: 2024-06-06 08:09 GMT
செம்பரம்பாக்கம் ஏரி
திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி அருகே செம்பரம்பாக்கம் ஏரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த 8 சென்டிமீட்டர் மழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 545 கன அடியாக அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 24 அடி அதில் தற்போதைய இருப்பு 16.25 அடி மொத்த கொள்ளளவு 3645 அதில் தற்போது 1769 மில்லியன் கன அடி கொள்ளளவு இருப்பு உள்ளது, நீர் வெளியேற்றம் சென்னை குடிநீருக்கு 109 கன அடி விவசாயத்திற்கு மூன்று கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது.