வருமான வரித்துறையினர் சோதனை
வரி ஏய்ப்பு புகார் காரணமாக ஈரோடு, பிரபல கட்டுமான நிறுவன உரிமையாளர் குழந்தைசாமியின், வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.;
Update: 2024-01-02 09:38 GMT
வரி ஏய்ப்பு புகார் காரணமாக ஈரோடு, பிரபல கட்டுமான நிறுவன உரிமையாளர் குழந்தைசாமியின், வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஈரோடு மாவட்டம் காஞ்சி கோவில் பகுதியை சேர்ந்தவர் குழந்தைசாமி.கட்டுமான நிறுவன உரிமையாளரான இவர் தமிழகம் முழுவதும் பல்வேறு கிளைகள் அமைத்து மூலம் கட்டுமான தொழில் செய்து வருகிறார்.இந்நிலையில் இவர் மீது வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈரோட்டில்அவரது வீடு , அலுவலகம. உட்பட 4 இடங்களில் 20 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மத்திய துணை ராணுவ படை வீரர்கள் உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றனர்.