மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு கடந்த சில நாட்களாக சரிந்த நிலையில் இன்று நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது.

Update: 2023-12-29 03:38 GMT

மேட்டூர் அணை

 காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பதும் குறைவுதுமாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 796 கன அடியில் இருந்த நிலையில் இன்று 901 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.13 அடியில் இருந்து 71.18 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு 33.72 டிஎம்சியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் அணை மின் நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News