மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 648 கன அடியாக அதிகரித்துள்ளது.
Update: 2024-01-11 05:35 GMT
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நடவடிக்கை 648 கன அடியாக அதிகரிப்பு. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவாக உள்ளது . நீர்வரத்து நேற்று வினாடிக்கு 544 கன அடியில் இருந்து இன்று 648 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.13 அடியில் இருந்து 71.12 அடியாக சரிந்துள்ளது. நீர்இருப்பு 33.66 டிஎம்சியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் அணை மின் நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.