மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 கன அடியிலிருந்து 70 கன அடியாக அதிகரித்துள்ளது.

Update: 2024-04-27 05:54 GMT

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 கன அடியிலிருந்து 70 கன அடியாக அதிகரித்துள்ளது. 

சேலம் மாவட்டம். மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 கன அடியிலிருந்து 70 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 100 கன அடிக்கு கீழ் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,200 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை காட்டிலும் குடிநீருக்கு திறக்கப்படும் இதில் அளவு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 53.98 அடியாகவும், நீர் இருப்பு 20.41 டி.எம்.சி.யாகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக அனணயிலிருந்து வினாடிக்கு 1,200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது
Tags:    

Similar News