குமரியில் அன்னாசிப்பழம் விலை உயர்வு
குமரி மாவட்டத்தில் கோடை வெயில் காரணமாக அன்னாசிப்பழம் உற்பத்தி குறைந்ததுடன் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் அன்னாசி அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது. குமரி மாவட்ட காலநிலை அன்னாசி விவசாயத்திற்கு ஏற்ற நிலையில் இருந்தாலும், பருவம் தவறி பெய்யும் தொடர் மழை, அதிக வெயில் போன்றவை உற்பத்தியை வெகுவாக பாதிக்கிறது.
காற்று, வெயில், வன விலங்குகளின் தொல்லை என வாழை விவசாயத் திற்கு அதிக சிக்கல்கள் ஏற்படுவதால், குமரி மாவட்டத்தில் கடந்த சில வருடமாக அன்னாசி விவசாயம் அதிகமாக நடந்து வருகிறது.
அன்னாசி விலையை தற்போது ஆன் லைன் மூலம் தெரித்து கொள்ளும் வசதியும் உள்ளது. தேவைக்கு ஏற்ப விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படும்.தற்போது வெயில் தாக்கி வருவதால் அன்னாசி பழத்திற்கு அதிகம் டிமாண்ட் உள்ளது. இதனால் விலை, கடந்த பல வருடங்களில் இல்லாத அளவில் அதிகரித்து உள்ளது. தற்போது கடைகளில் அன்னாசி பழம் சில்லரை விலைக்கு கிலோ ஒன்றுக்கு 90 முதல் 100 ரூபாய் வரை உள்ளது. இதுபோன்று மொத்த வியாபாரிகளும் அதிக விலை கொடுத்து அன்னாசி காய்கள் மற்றும் பழங்கள் வாங்கி செல்கின்றனர்.ஆனால், தொடர்ந்து வெயிலின் தாக்கம் இருப்பதால் தரமான அன்னாசி பழங்கள் உற்பத்தி ஆக வில்லை.
இது விவசா யிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. முதல் தரம் காய்களுக்கு கிலோ ஒன்றிக்கு 65 ரூபாய் விலை உள்ளது. ஆனால் தற்போது விற்பனைக்கு தயாராகி உள்ள பெரும் பாலான காய்கள் கிலோ ஒன்றிக்கு 35 ரூபாய் அளவில் தான் கிடைக்கிறது என விவசாயிகள் கூறு கின்றனர்.
வெயிலின் தாக்கத்தில் இருந்து காப்பாற்ற அதிக அளவில் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இதற்கு அதிக செலவு ஏற்படும்.இதனால் கோடை காலத்தில் விவசாய செலவு அதிகரிக்கிறது. தற்போது அதிக டிமாண்டும், மார்க்கெட்டில் அதிக விலையும் உள்ளதால் விவசாயிகள் செலவிற்கு ஏற்ற வருவாயை பெற்று வருகின்றனர்.