திற்பரப்பு அருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.;
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் குறைந்து வருகிறது.
அதே வேளையில் திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து திற்பரப்பு அருவிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இன்று மே 1 விடுமுறை நாள் என்பதால் இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். கடும் வெயிலிலும் மிதமான தண்ணீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளியல் போட்டனர். இதேபோன்று சிற்றாறு அணை பகுதியிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
அங்கும் சுற்றுலா பயணிகள் அணையில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் சிற்றாறு அணை பகுதியில் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்