தொடர் மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

குமரியில் தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2024-05-14 02:13 GMT

 குமரியில் தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.  

குமரி மாவட்டத்தில் ஒரு மாத காலத்திற்கு மேலாக வெயில் கொளுத்தி வந்தது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் அதிக மாக இருந்தது.இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர். அதே வேளையில் மாவட்டத் தில் கடந்த சில நாட்க ளாக பிற்பகல் வேளையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதும் மழை பொழிவதுமாக இருந்து வருகிறது.மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் இந்த மழை காணப்படுகிறது. இ

தனால் மாவட்டத்தில் வெப்பத் தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவுகிறது. மாவட்டத்தில் நேற்று பரவலாக மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்தது. ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை காணப்பட்டது. காலை 11 மணி முதல் பல்வேறு இடங்களில் கொட்டித்தீர்த்தது.

இன்று காலை வரை அதிகபட்சமாக களியல் பகுதியில் 50.3 மி.மீ மழை பெய்திருந்தது.மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர் மட்டம் 44.7 அடியாகும். அணைக்கு 213 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருந்தது. பெருஞ்சாணி நீர் மட்டம் 46.7 அடியாகும்.பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் 45 அடியை எட்டி வரும் நிலையில் மலையோர பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணை திறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News