தெருக்களில் நாய்கள், மாடுகள் தொல்லை அதிகரிப்பு
தெருக்களில் நாய்கள், மாடுகள் தொல்லை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.;
தெருக்களில் நிற்கும் மாடுகள்
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் எங்கும் சுற்றித்திரியும் மாடுகள், துரத்தி கடிக்கும் தெரு நாய்கள், நடுரோட்டில் மாடுகள் நிற்பதால் ஆம்புலன்சுகளே வரமறுக்கும் குறுகலான தெருக்கள்,எந்நேரமும் கடித்து குதறும் கொசுக்கள் என்பது உள்ளிட்ட பிரச்னைகளில் திண்டுக்கல் மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.
திண்டுக்கல் மாநகராட்சி 48 வார்டுகள் உள்ளன. இங்கு தெருக்கள் தோறும் பஞ்சமில்லாமல்தெரு நாய்கள் கூட்டமாக வர குழந்தைகளை கடித்து குதுறுகின்றன. இதைப்பிடிக்க மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டால் கண்டுகொள்ளாமல் உள்ளனர். கண்துடைப்பிற்கு ஒருசில நாய்களை பிடிக்கின்றனர்.
அதையும் மீண்டும் இங்குள்ள தெருக்களில் கொண்டு விடுகின்றனர். வார்டில் உள்ளவர்கள் சிலர் மாடுகளை வீட்டு பகுதியில் வளர்க்காமல் தெருக்களில் விடுகின்றனர்.தொடரும் இப்பிரச்னைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.