தேவூரில் இந்தியா கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு

நாகை மக்களவை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜை ஆதரித்து தேவூரில் கடை , கடையாக துண்டு பிரசுரங்களை வழங்கி இந்தியா கூட்டணியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Update: 2024-04-11 09:43 GMT

வாக்கு சேகரிப்பு 

 நாகை நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் போட்டியிடுகிறார். நகரப் பகுதிகளில்  தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதே போன்று கட்சியினர் கிராமப்புறங்களில் வீடு, கடை மற்றும் பொது மக்களிடம் தீவிர வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் தேவூர் கடைத்தெரு பகுதியில் திமுக ஒன்றிய கவுன்சிலர் கே.கே.கண்ணன் தலைமையில் வேட்பாளர் வை.செல்வராஜ்க்கு ஆதரவு திரட்டினர்.

கடை, கடையாக துண்டு பிரசுரங்களை வழங்கி கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். இதில் திமுக கிளை செயலாளர்கள் ஆர்.முருகன், எஸ்.ராஜா, எஸ்.இளஞ்செழியன், எம்.முகமது ஷெரீப் , தேர்தல் பணிக்குழு தலைவர் எம்.நேசமணி, செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் எம்.மகேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் வைதேகி ராசு, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பொற்கொடி கணேசன் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் , திமுக கட்சியினர் கலந்துக் கொண்டனர்

Tags:    

Similar News