இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தொடக்கவிழா
இந்திய தேசிய காங்கிரஸின் 139-ம் ஆண்டு தொடக்கவிழா நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-28 12:17 GMT
கொடியேற்று விழா
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 139 ஆம் ஆண்டு தொடக்கவிழா இன்று கொண்டாடபட்டது. இதனையொட்டி அரியலூர் நகர காங்கிரஸ் சார்பில் அரியலூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள காமராஜர் சிலைமுன்பு அமைக்கபட்டிருந்த கட்சி கொடிகம்பத்தில் நகர தலைவர் சிவக்குமார் அக்கட்சி கொடியினை ஏற்றி வைத்தார்.
பின்னர் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடபட்டது. இதில் மாவட்ட துணை தலைவர் பழனிசாமி, நகர செயலாளர் சுப்ரமணியன், மாவட்ட பொது செயலாளர் ப்ரஸ் செந்தில் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.