எனக்கு வாக்களிக்காதீர்கள் சுயேட்சை வேட்பாளர்கள் நூதன பிரச்சாரம்

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி சுயேட்சை வேட்பாளர் தன்னால் பணம் தர இயலாது எனவும் அதனால் தனக்கு வாக்களிக்க வேண்டாம் எனவும் நூதன பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.;

Update: 2024-04-10 07:28 GMT

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி சுயேட்சை வேட்பாளராக ஆத்தூர் அருகே நரசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் சுயேச்சை வேட்பாளர் கோவிந்தராஜ் என்பவர் பல்வேறு இடங்களில் தனி ஆளாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிக்கும் போது மக்கள் இலவசம் மற்றும் பணத்தை எதிர்பார்ப்பதாகவும் என்னால் தர இயலாததால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எனக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டாம் என துண்டு பிரசுரம் நூதன முறையில் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Advertisement

அப்போது அவர் தெரிவித்தது என்னவென்றால் நாட்டு மக்கள் தேர்தல் திருவிழா என்றால் பணம் இலவசம் பார்த்து வாக்களிக்க தயாராக உள்ளதாகவும் பொதுமக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வகையில் வாக்காளர்கள் பணம் பெறாமலும் இலவச எதிர்பார்க்காமலும் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எனக்கு வாக்களிக்க வேண்டாம் என துண்டு பிரசுரம் வழங்கியதாகவும் தெரிவித்தார்.

இலவசத்தை எதிர்பார்க்காத வேட்பாளருக்கு வாக்களித்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News