ஆரணியில் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா
இந்திரா காந்தி பிறந்த நாள் விழா
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி, ஆரணியில் காங்கிரஸ்கட்சி சார்பில், அவரது திருவுரு படத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி காந்தி சிலை அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.பிரசாத் தலைமையில், கட்சி நிர்வாகிகள் இந்திரா காந்தி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். தொடர்ந்து, ஆரணியை அடுத்த இரும்பேடு நான்குமுனை சந்திப்பு சாலையில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் டி.பி.ஜெ.ராஜ பாபு, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஏ.ஆர்.அசோக்குமார், டி.ஜெயவேல், தெள்ளுர் பி.சேகர், எம்.ராமலிங்கம், டாக்டர் வாசுதேவன்,பி.கருணாமூர்த்தி,வட்டாரத் தலைவர்கள் ஏ.பி.பந்தாமணி, இளங்கோவன்,மருசூர்இளங்கோவன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலர் எஸ். வினோத்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.