இண்டூரில் தொற்றா நோய் கண்டறியும் முகாம்

தர்மபுரி மாவட்ட தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் மற்றும் மற்றும் நல்லம்பள்ளி வட்டாரம் பொது சுகாதாரத்துறை இணைந்து நடத்திய தொற்றா நோய் கண்டறியும் முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-02-17 12:54 GMT
தொற்றா நோய் கண்டறியும் முகாம்

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் இண்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் மற்றும் பொது சுகாதாரத்துறை இணைந்து நடத்திய தொற்றா நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இ சி ஜி, சிறுநீரக ஆய்வு, சிறுநீரக பரிசோதனை, சளி மற்றும் ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த பரிசோதனையில் சுமார் 200 க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் கே வாசுதேவன், மருத்துவர்கள் அசோக், குமார், கோமதி, அபினேஷ் மற்றும் தமிழ் தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்க மாவட்ட தலைவர் பி சேட்டு, மாவட்ட செயலாளர் எம் முனுசாமி, மாவட்ட பொருளாளர் ஏ பி முருகன் மற்றும் நிர்வாகிகள் செல்வம், ரங்கநாதன், விஜயகுமார், ஞானவேல், சரவணன், பிரபு, ராஜா, ஆனந்த், ராஜா, தன்ராஜ், ராஜேந்திரன், மோகன், பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News