அரசு மருத்துவமனையில் நுண்துளைக்கருவி அறுவை சிகிச்சை துவக்கம்

வேதாரண்யம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாவட்ட குடும்பநல செயலகம் சார்பில் நுண்துளைக்கருவி(லேபராஸ்கோபி) மூலம் குடும்பநல அறுவை சிகிச்சை முதல்முறையாக தொடங்கப்பட்டது.

Update: 2024-02-01 06:52 GMT

ஆட்சியர் கருத்து கேட்பு 

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரன்யம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாவட்ட குடும்பநல செயலகம் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதல்முறையாக தொடங்கப்பட்ட நுண்துளைககருலேபராஸ்கோபி) மூலம் குடும்பநல அறுவை சிகிச்சை முறையில் பயனடைந்த தாய்மார்களை ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், சந்தித்து உரையாடினார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெறும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகளில் 97% மேல் தாய்மார்களே மேற்கொள்கின்றனர். பெண்களுக்கான குடும்ப கட்டுபாடு அறுவைசிகிச்சை முறைகளில் மிகவும் எளிய சிகிச்சை முறை லேப்ராஸ்கோப் எனும் நுண்துளை கருவி மூலம் செய்யப்படும் சிகிச்சை ஆகும். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவமனையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று லேப்ராஸ்கோப் மூலம் பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்கள் மூலம் எளிய முறையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

மாதவிலக்கான 7 நாட்களுக்குள் அல்லது கருக்கலைப்பிற்கு பின் லேப்ராஸ்கோப் மூலம் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்து கொள்ளலாம். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற தாய்மார்களும் இச்சிகிச்சையை மேற்கொள்ளலாம். அதிக இரத்த இழப்பு ஏற்படாது. அதிக வலி ஏற்படாது. சிகிச்சை முடிந்து மறு நாளே வீடு திரும்பலாம். கடின வேலைகளையும் முன்பு போலவே செய்ய முடியும். இச்சிகிச்சையை செய்து கொள்ளும் தாய்மார்களுக்கு அரசு வழுங்கும் ஊக்கதொகை ரூபாய் 600 வழங்கப்படும். மேலும் ஊக்குவிப்பாளருக்கு ரூபாய் 150 வழங்கப்படும்.

எனவே இந்த எளிய சிகிச்சை மூலம் தாய்மார்கள் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்து கெண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் மகப்பேறு இறப்பு மற்றும் பச்சிளம் குழந்தைகள் இறப்பு அறவே இல்லை கேட்டுக்கொள்கிறேன். Знах உறுவாக்கிட உதவிடுமாறு அன்புடன் இந்நிகழ்வில் இணை இயக்குநர்(மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள்) ஜோம்பின் அமுதா, முதன்மை மருத்துவ அலுவார்(பொ) தனசேகரன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News