ரூ.28.27 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகள் துவக்கம்
தூக்கநாயக்கன்பாளையத்தில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.28.27 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டம், தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.27.00 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி துவக்கி வைத்தார். முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.27.00 கோடி மதிப்பீட்டில் சத்தி - அத்தாணி பவானி சாலை கி.மீ 11/0 - 17/0. 19/0 23/0 மற்றும் 27/0-28/8 வரை இருவழித் தடத்திலிருந்து இருவழித்தடமாக அகலப்படுத்துதல் ,வடிகால் கட்டுதல், கி.மீ 22/4 ல் தற்போதுள்ள குழாய் பாலத்திற்கு பதிலாக பாலம் அமைக்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
வரப்பள்ளம், கொண்டையம்பாளையம் ஆகிய இடங்களில் 2 பாலங்களும் அமையவுள்ளது. இப்பாலம் பொதுமக்களுக்கு மிகவும்பயனுள்ளதாக இருக்கும். மேலும் திட்டப்பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, தூக்கநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், பெருமுகை ஊராட்சி, கள்ளிப்பட்டியில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணியும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.