பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் துவக்கம்
பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் துவக்கம்
Update: 2024-06-14 08:12 GMT
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், அனைத்து வருவாய் கிராமங்களிலும், கிராம நிர்வாக அலுவலர்களால் பராமரிக்கப்பட்டு வரும் வருவாய் கணக்குகளை தணிக்கை செய்வதற்காக, 1433 ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ தலைமையில், வியாழக்கிழமை தொடங்கியது. பேராவூரணி வட்டாட்சியர் தெய்வானை, முன்னிலை வகித்தார். பேராவூரணி தாலுகா பெருமகளூர் உள்வட்டத்திற்கு முதல் நாளான வியாழக்கிழமை தணிக்கை நடைபெற்றது. இன்று 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை குருவிக்கரம்பை உள் வட்டத்திற்கும் வருவாய் தணிக்கை நடைபெற உள்ளது. இதில், வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சு.தரணிகா, தலைமை உதவியாளர் டி.பழனிவேல், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் லெ.பாஸ்கரன், வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடாசலம், வட்டத் துணை ஆய்வாளர் அ.நாகுத்தேவன், தலைமை இடத்து துணை வட்டாட்சியர் நா.சுப்பிரமணியன், மண்டல துணை வட்டாட்சியர் க. அருண், கூடுதல் தலைமை இடத்து துணை வட்டாட்சியர் சு.பரிமளா, வட்ட சார் ஆய்வாளர் ரெ.சந்தோஷ், குறு வட்ட அலுவலர் பா.ராஜலட்சுமி, சரக வருவாய் ஆய்வாளர் எஸ். யோகசந்திரன், மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.