களக்காடு கோவிலில் தெப்போற்சவம் துவக்கம்

களக்காடு கோவிலில் தெப்போற்சவம் உற்சவ வைபவம் துவங்கியது.

Update: 2024-02-05 04:58 GMT

களக்காடு கோவிலில் தெப்போற்சவம் உற்சவ வைபவம் துவங்கியது. 

நெல்லை மாவட்டம் களக்காட்டில் உள்ள கோமதியம்பாள் சமேத சத்தியவாகீஸ்வரர், வரதராஜ பெருமாள், சந்தான கோபாலகிருஷ்ணன் ஆகிய கோவில்களில் ஆண்டுதோறும் தை மாத கடைசி வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாள்களுக்கு சுவாமிகளுக்கு தனித்தனியே தெப்போற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு தெப்போற்சவம் வரும் 9ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News