தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் காயம் அடைந்தவர் பலி

தச்சங்குறிச்சியில் நடந்த ஜல்லிக்கட்டில் காயம் அடைந்த நபர் உயிரிழந்தார்.;

Update: 2024-01-12 16:07 GMT

பலியான வாலிபர்

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் கடந்த 6ம் தேதி 2024ம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட 571 காளைகள் வாடிவாசலில் களம்கண்ட நிலையில்‌ காளைகளை தழுவ 276 வீரர்கள் 5 சுற்றுகளாக களம் இறக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த ஜல்லிக்கட்டில் காளையர்கள் பார்வையாளர்கள் காளைகளை அழைத்து வந்தவர்கள் என மொத்தம் 11 பேர் படுகாயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.‌

Advertisement

இந்நிலையில் இதில் மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த காளையை அழைத்து வந்திருந்த மருதா (19) என்ற இளைஞர் காளை குத்தி கடந்த நான்கு தினங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அந்த இளைஞரின் குடும்பத்தினர் மட்டுமின்றி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் அந்த இளைஞரின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு போதிய நிவாரண உதவிகளை செய்ய வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tags:    

Similar News