காயமடைந்த புள்ளிமான் வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
சமயபுரம் அருகே இருங்களூரில் எஸ்.ஆர்.எம் கல்விக்குழுமம் அருகில் காயங்களுடன் சுற்றித் திரிந்த புள்ளிமானை ஊராட்சி மன்ற தலைவர் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.;
Update: 2024-06-13 03:25 GMT
சமயபுரம் அருகே இருங்களூரில் எஸ்.ஆர்.எம் கல்விக்குழுமம் அருகில் காயங்களுடன் சுற்றித் திரிந்த புள்ளிமானை ஊராட்சி மன்ற தலைவர் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே தச்சங்குறிச்சியில் வனப்பகுதி் உள்ளது. இங்கு ஆபத்தில்லாத வனவிலங்குகள் வசித்து வருகின்றனர்.அவ்வப்போது உணவைத் தேடி வனவிலங்குகள் கிராமப் பகுதிக்கு வருவது வழக்கம். இஇந்நிலையில் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சியில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்விக்குழுமம் அருகில் புள்ளிமான் ஒன்று காயங்களுடன் சுற்றித் திரிந்து. இதைக் கண்ட ஊராட்சி மன்ற தலைவர் பொதுமக்கள் உதவியுடன் புள்ளிமானை மீட்டனர். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினரிடம் ஊராட்சி மன்ற தலைவர் புள்ளிமானை ஒப்படைத்தார்.