புனரமைப்பு என்ற பெயரில் அழிக்கப்படும் கல்வெட்டுகள் -பொன்.மாணிக்கவேல்

கோவில் புனரமைப்பு என்ற பெயரில் கோவில்களில் உள்ள தொன்மையான கல்வெட்டுகள் அழிக்கப்படுகின்றன என முன்னாள் ஜ.ஜி பொன்.மாணிக்கவேல் கூறியுள்ளார்.

Update: 2024-01-01 09:32 GMT

கோவில் புனரமைப்பு என்ற பெயரில் கோவில்களில் உள்ள தொன்மையான கல்வெட்டுகள் அழிக்கப்படுகின்றன என முன்னாள் ஜ.ஜி பொன்.மாணிக்கவேல் கூறியுள்ளார்.

இந்து முண்ணனி சார்பில் சென்னிமலை முருகன் கோயிலிருந்து நடைபெற்ற வேல் யாத்திரையில் முன்னாள் காவல்துறை அதிகாரி பொன்.மாணிக்கவேல் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் காவல்துறை அதிகாரி பொன்.மாணிக்கவேல் , அரசை பொறுத்த வரை எந்த ஒரு நிதியும் ஒதுக்கீடு செய்து கோவில்களை பராமரிப்பதில்லை. கோவில் திருப்பணி போது ஒவ்வொரு பணிக்கும் கமிஷன் பெறப்படுவதாகவும் , கோவில் புரனமைப்பு என்ற பெயரில் கோவில்களில் உள்ள தொன்மையான கல்வெட்டுகள் அழிக்கப்படுவதால் , கோவில் திருப்பணிகள் மற்றும் புரனையமைப்பு பணிகளை மாநில தொல்லியல் துறையினர் மேற்கொள்ள வேண்டும்.

அப்படி அவர்கள் செய்வதன் மூலம் கோவில்களின் பழமையான தொன்மை பாதுகாக்கப்படும் என்றார். 2012ம் வருடம் மட்டும் அமெரிக்க நியூயார்க் நகரில் இருந்து 2ஆயிரத்து 662 சிலைகள் மீட்கப்பட்டதாகவும் , மீட்கப்பட்ட சிலைகள் மதிப்பு ஆயிரத்து 20 கோடி ரூபாயாக கருதப்படுகிறது என்றும் , அமெரிக்காவில் உள்ள சிலைகளை தமிழக அரசு மத்திய அரசு மூலம் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News