போரூர் ஏரியில் ஆகாயத்தாமரை துார் வாரி அகற்ற வலியுறுத்தல்

போரூர் ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகள் நீரை உறிஞ்சி, ஏரி நீர் வேகமாக குறையும் நிலை உள்ளதால், ஆகாய தாமரையை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2024-05-03 01:52 GMT

போரூர் ஏரியில் ஆகாயத்தாமரை துார் வாரி அகற்ற வலியுறுத்தல்

சென்னைக்கு மிக அருகில், மாநகராட்சி எல்லையில் போரூர் ஏரி உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு, போரூர் ஏரி துார் வாரப்பட்டு, 46 மில்லியன் கன அடி கொள்ளளவில் இருந்து, 70 மில்லியன் கன அடி நீரை சேமிக்கும் வகையில், ஆழப்படுத்தப்பட்டது. மேலும் 2017ம் ஆண்டு இந்த ஏரிக்கரையில், 1.85 கோடி ரூபாய் செலவில், தற்காலிக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. இந்த சுத்திகரிப்பு நிலையம் வாயிலாக, தினசரி, 40 லட்சம் லிட்டர் நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, சென்னை குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு 'மிக்ஜாம்' புயல் தாக்கத்தால் பெய்த கனமழையில் ஏரி நிரம்பி வழிந்தது. தற்போது, சுட்டெரிக்கும் வெயிலில், ஏரியில் உள்ள நீர் குறைந்து வருகிறது. அத்துடன், ஏரியின் பெரும்பகுதியில், ஆகாய தாமரை செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இந்த செடிகள் நாள் ஒன்றுக்கு, 3 முதல் 5 லிட்டர் தண்ணீரை உறிஞ்சும் திறன் கொண்டவை. அதனால், ஏரி வேகமாக வறண்டு, சுற்றுவட்டாரங்களில், நிலத்தடி நீர் மட்டம் குறைய வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க, ஏரியில் வளர்ந்துள்ள ஆகாய தாமரை தாவரங்களை அகற்ற வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News