ஓட்டுச்சாவடி மையங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, ஆத்துார், கெங்கவல்லி, ஏற்காடு தொகுதி ஒட்டுச்சாவடி மையங்களில் பாதுகாப்பு குடிநீர், மின்சாரம் போன்ற வசதிகள் குறித்து ஆய்வு நடந்தன.
Update: 2024-03-09 04:28 GMT
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி தொகுதியில் உள்ள ஆத்துார், கெங்கவல்லி, ஏற்காடு சட்டசபை தொகுதிகளின் ஒட்டுச் சாவடி மையங்களின் பாதுகாப்பு குடிநீர், மின்சாரம் போன்ற வச திகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பேரில் ஆத்துார் சட்டசபை தொகுப்பு தேர்தலை உட்பட்ட பெத்தநாயக் கன்பாளையம், புத்திரகவுண் டன்பாளையம், ஏத்தாப்பூர் பகுதியில் உள்ள அரசு மேல் நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றம் தொடக்கப் பள்ளிகளில், , பெத்தநாயக்கன்பாளையம் பி.டி.ஒ துரைசாமி ஆய்வு மேற்கொண்டார். அதேபோல், ஆத்துார் அருகே, கல்லாநத்தம் மற்றும் துலுக்கனுார் அரசு தொடக்கப் பள்ளி கட்டடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இவற்றை சீர மைப்பு செய்வதற்கான பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது.