ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆய்வு
கெங்கவல்லி அருகே ஒதியத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.;
Update: 2024-01-09 11:15 GMT
ஒதியத்தூர்
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே ஒதியத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், மக்காச்சோளம் ஏலம் தினந்தோறும் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் சேர்ந்த விவசாயிகள் மக்காச்சோளத்தை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். விற்பனை கூடத்தில் நடைபெறும் ஏலத்தை, சேலம் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் கண்ணன் நேற்று நேரில் பார்வையிட்டு மக்காச்சோளம் தரத்தை ஆய்வு செய்தார்.
மேலும், மக்காச்சோளத்தை ஏலத்துக்கு கொண்டு வந்த விவசாயிகளிடம் கலந்துரையாடினார். அதில் ஏலம் நடைபெற்று, உடனடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் பணம் வரவு வைப்பதற்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டனர். ஆய்வின் போது, ஒழுங்குமுறை விற்பனை கூட மேற்பார்வையாளர் மணியரசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.