உணவுத்துறை அதிகாரிகள் சோதனை
திண்டுக்கல் அருகே தைப்பூச பக்தர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என உணவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.;
By : King 24x7 Angel
Update: 2024-01-25 10:31 GMT
உணவுத்துறை அதிகாரிகள் சோதனை
திண்டுக்கல் அருகே தைப்பூச பக்தர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா என உணவுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு உணவு பாதுகாப்பு துறை சார்பாக பழநி, ஒட்டன்சத்திரம் பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு சுற்றுவட்டார பகுதிகளில் அன்னதானம் வழங்கும் இடங்களை உணவு பாதுகாப்பு அலுவலர்களைக் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தரமான எண்ணெயில் வடை , மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு நடத்தினர். மேலும் பக்தர்களுக்கு உணவு வழங்குவதற்கு முன்பாக அன்னதானம் வழங்குபவர்கள் சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் முன் அனுமதி வாங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.