உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை
கள்ளக்குறிச்சி மாவட்டம் , உளுந்துார்பேட்டை பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.;
Update: 2024-05-10 06:57 GMT
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு
உளுந்துார்பேட்டை டோல்கேட் மற்றும் பஸ் நிலையப் பகுதியில் உள்ள ஓட்டல் பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் கொளஞ்சி தலைமையிலான அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உணவகங்களில் உணவுப் பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்தனர்.
பேக்கரி கடைகளில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தியது தெரிய வந்தது. அதன்பேரில் இரு கடைகளுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.