கம்பம் கூடலூரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு
கம்பம் கூடலூரில் போதை புகையிலை விற்பனை செய்த கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.;
Update: 2023-12-02 10:23 GMT
கம்பம் கூடலூரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு
கூடலுாரில் தடையை மீறி கடைகளில் போதை புகையிலை விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் மணிமாறன் சோதனை மேற்கொண்டார். எல்.எப்.ரோடு, பெட்ரோல் பங்க் ரோடு, மெயின் பஜாரில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் போதைப் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டு ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்த கடைக்கு சீல் வைக்கபட்டது.