சேலம் கோட்டத்தில் தெற்கு ரெயில்வே பாதுகாப்பு தணிக்கை குழுவினர் ஆய்வு

Update: 2023-12-03 09:19 GMT

தண்டவாளத்தில் ஆய்வு  மேற்கொண்ட அதிகாரிகள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தெற்கு ரெயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு அலுவலர் சோமேஷ்குமார் தலைமையில் சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா, கூடுதல் மேலாளர் சிவலிங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற பாதுகாப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தெற்கு ரெயில்வே முதன்மை தலைமை பாதுகாப்பு அலுவலர் சோமேஷ்குமார் பேசினார். இதை தொடர்ந்து பாதுகாப்பு தணிக்கைக் குழுவினர் சேலம் ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில் ஓட்டுநர்கள் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளையும், சேலம்- ஆத்தூர் இடையிலான தண்டவாள பகுதியிலும், பாலங்கள், வளைவுகள், லெவல் கிராசிங்குகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே பாதுகாப்புத் தணிக்கைக் குழுவினர் 2-வது நாளாக சேலம்-கரூர் வழித்தடத்திலும், நாமக்கல் யார்டிலும், கரூர் செல்லும் வழியில் மோகனூர்- கரூர் இடையிலான பாலங்கள், லெவல் கிராசிங்குகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து கரூர் சென்றடைந்த குழுவினர் கரூர் ரெயில் நிலையம் அங்குள்ள ரெயில்வேக்கு சொந்தமான பல்வேறு பரிவுகளை ஆய்வு செய்தனர். முடிவில் பாதுகாப்புத் தணிக்கை குழுவினர் சேலம் கோட்டத்தின் பாதுகாப்பு செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தனர். மேலும் பாதுகாப்பு கவனம் தேவைப்படும் பகுதிகளையும் சுட்டிக்காட்டி, பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடைமுறைகளை பரிந்துரைத்தனர். இதில் முதன்மை எந்திரவியல் பொறியளர் முகுந்த், சேலம் ரெயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம், கோட்ட பாதுகாப்பு அலுவலர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News