ரெயில்வே இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் ஆய்வு
திண்டிவனம் ரெயில்வே இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் மூத்த கோட்ட பாதுகாப்பு படை ஆணையர் ஆய்வு மேற்கொண்டு கூட்ட நெரிசலில் நடைபெறும் குற்றசம்பவங்களை தடுக்க ஆலோசனை வழங்கினார்
Update: 2023-12-22 10:37 GMT
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் மூத்த கோட்ட பாதுகாப்பு படை ஆணையர் ராமகிருஷ்ணா திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ரெயில்வே பாதுகாப்பு படை செங்கல்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ், திண்டிவனம் ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர்கள் தேசி, ஜீவானந்தம், சுரேஷன், ஜெயன் ஆகியோர் அவருக்கு வரவேற்பு அளித்தனர். இதையடுத்து பாதுகாப்பு படை போலீசாரிடம் மூத்த கோட்ட ஆணையர் ராமகிருஷ்ணா ஆலோசனை மேற்கொண்டார். திண்டிவனம் பகுதி சென்னைக்கு அருகாமையிலும், புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பதி மற்றும் தென் தமிழக வழித்தடங்களுக்கு மையப் பகுதியாகவும் உள்ளது. எனவே கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவம் எதுவும் நடைபெறாமல் இருக்க கவனமாக பணியாற்ற வேண்டும். மாற்றுத்திறனாளி சிறப்பு பெட்டியில் மற்றவர்கள் யாரேனும் பயணிக்காத வகையில் செயல்பட வேண்டும். பெண் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று ரெயில்வே போலீசாருக்கு அறிவுறுத்தினார். முன்னதாக திண்டிவனம் ரெயில் நிலைய நடை மேடையை ஆணையர் ராமகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.