தொழிற்பயிற்சி நிலையத்தில் கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

ராணிப்பேட்டை ஐடிஐ யில் கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜெயந்த் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார்.

Update: 2024-05-18 15:17 GMT

தொழிற்பயிற்சி நிலையத்தில் கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

ராணிப்பேட்டை பாரதி நகரில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ஐ.டி.ஐ.) இயங்கி வருகிறது. இந்த நிலையத்தினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த் ஆய்வு செய்தார். கலெக்டர் வளர்மதி அவருடன் சென்றிருந்தார்.

ஆய்வின்போது தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவ- மாணவிகளின் விவரங்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை, துறைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, மையத்தில் உள்ள நூலகத்தை பார்வையிட்டு, மாணவர்களுக்கு தேவையான கூடுதல் புத்தகங்கள் இடம்பெறவும், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கவும் நவீன தொழில்நுட்பங்களை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பாடங்களை கற்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, பாடப்பிரிவுகள், தமிழ்நாடு அரசால் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 4.0 டாடா தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தில் நவீன எந்திரங்கள் கொண்டு மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது திறன் மேம்பாட்டுத்துறை இணை இயக்குனர் (தொழிற்பயிற்சி) பிரபாகரன், தொழிற்பயிற்சி நிலைய மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் செல்வம், அருண், முதல்வர் ஆறுமுகம் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News