தனியாா் உரக்கடைகளில் வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு

கோவில்பட்டி வட்டத்துக்குள்பட்ட இளையரசனேந்தல் பகுதியில் உள்ள தனியாா் உரக்கடைகளில் வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

Update: 2023-11-29 03:48 GMT

ஆய்வு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குநா் நாகராஜ், இளையரசனேந்தல் பகுதியில் உள்ள தனியாா் உரக்கடை மற்றும் பூச்சி மருந்து கடைகளில் ஆய்வு மேற்கொண்டு உரிமம், விலைப்பட்டியல், இருப்பு விவரம் ஆகியவற்றை சரிபாா்த்தாா். மேலும், தனியாருக்குச் சொந்தமான கடையில் உர விற்பனையில் உள்ள இருப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டு, மேல் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்தாா். பூச்சிக் கொல்லி மருந்துகள் அனுமதி பெறாத நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்து விநியோகம் செய்யப்படுவது கண்டறியப்பட்டு, தக்க அறிவுரை வழங்கி, உரிய அனுமதி பெறும் வரை பூச்சிக் கொல்லி மருந்து சட்டம் 1968-ன் படி தற்காலிக விற்பனை தடை உத்தரவையும் வழங்கினாா். மேலும், இதுபோன்ற குறைபாடுகள் தொடா்ந்து கண்டறியப்படும் பட்சத்தில் தனியாா் கடைகள் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தாா்.
Tags:    

Similar News