வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு

வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

Update: 2024-03-29 18:17 GMT

 ஆய்வு 

பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-யையொட்டி ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும் , மாவட்ட ஆட்சித்தலைவருமான ராஜ கோபால் சுள்கரா மற்றும் ஈரோடு மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் ராஜீவ் ரஞ்சன் மீனா ஆகியோர் வாக்கு எண்ணும் பையமான சித்தோடு ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாடு பணிகளான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் இடங்கள், வாக்கு பெட்டிகள் வைப்பறை, வாக்கு எண்ணும் அறை, வாகனம் நிறுத்துமிடம், தபால் வாக்குகள் வைப்பறை மற்றும் எணினும் அறை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
Tags:    

Similar News