தனியார் பள்ளி வாகனங்கள் கோட்டாட்சியர் தலைமையில் ஆய்வு
கும்பகோணத்தில் கோட்டாட்சியர் தலைமையில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.;
Update: 2024-05-12 05:09 GMT
பள்ளி வாகனங்கள் ஆய்வு
கும்பகோணம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி மைதானத்தில் கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், வலங்கைமான் ஆகிய நான்கு தாலுக்காக்களை சேர்ந்த தனியார் பள்ளிகளின் வாகனங்களை கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் கோகிலா, கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் லூர்து பிரவீன், கும்பகோணம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.