திருப்பத்தூர் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி ஆய்வு
திருப்பத்தூர் தில்லை நகர் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணியை நகர்மன்ற உறுப்பினர் வெற்றி கொண்டான் நேரில் ஆய்வு செய்தார்.
By : King 24X7 News (B)
Update: 2023-12-31 16:22 GMT
திருப்பத்தூர் நகராட்சி 36 வது வார்டு தில்லை நகர் பகுதியில் திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் புதியதாக தார்சாலை அமைக்கும் பணி இன்று நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தார் சாலை அமைக்கும் பணியை 36 வது நகர்மன்ற உறுப்பினரும் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வெற்றி கொண்டான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது தார் சாலை தரமாக அமைக்க வேண்டும் என ஒப்பந்ததாரரிடம் கேட்டு கொண்டார். அப்போது ஒப்பந்ததாரர் குணசேகரன் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..