வாக்கு எண்ணும் மையத்தில் உதவி தேர்தல் அலுவலர் ஆய்வு
சேலம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Update: 2024-04-13 09:36 GMT
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் சேலம் கருப்பூரில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் எண்ணப்படுகின்றன. இதற்காக அங்கு பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி பதிவான வாக்குகள் பாதுகாப்பு வைக்கப்பட உள்ள இடம், வாக்கு எண்ணும் இடம் ஆகியவற்றை உதவி தேர்தல் அலுவலர் பாலச்சந்தர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
அப்போது அவர் வாக்குப்பதிவு முடிந்ததும், பதிவான வாக்கு பெட்டிகள் பாதுகாப்புடன் கொண்டு வர அனைத்து முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணும் இடத்தில் 14 மேஜைகள் அமைக்கப்படும். 18 சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்படும் என்று கூறினார்.
ஆய்வின் போது துணை ஆணையாளர் அசோக்குமார், கண்காணிப்பு பொறியாளர் கமலநாதன் உள்பட அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.