விழுப்புரத்தில் வாக்கு எண்ணிக்கை மையம் ஆய்வு
விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமாக அறி விக்கப்பட்டுள்ள விழுப்புரம் அறிஞர்அண்ணாஅரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அடி ப்படை வசதிகள் மற்றும் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரும்,
ஆட்சியருமான பழனி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் மக்களவைத் தேர்தலில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளைக் கொண்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசுக் கலை மற்றும் அறிவியல்கல்லூரியில் தனித்தனியாக அமைக்கப்படவுள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்படும்.
பாதுகாப்பு அறைகள், வாக்கு எண்ணும் அறை என அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் தடுப்புக்கட்டைகள் வசதிகள், சுற்றுவாரியாக வாக்குவிவரத்தை அறிவிப்பதற்கான ஒலிபெருக்கி வசதி, தடையில்லா மின்சார வசதி போன்றவற்றை சம்பந்தப்பட்ட துறையினர் சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும். மேலும் கூடுதலாக ஜெனரேட்டர், தீயணைப்புக் கருவிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இதைத்தவிர வாக்கு எண்ணிக்கைமையத்தில் தேர்தல் பார்வையாளர் அறை, தேர்தல் நடத்தும் அலுவலருக்கான அறை, முகவர்கள் அறை, காவலர்கள் அறை போன்ற அனைத்து ஏற்பாடுகளையும் சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும்.
தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான முதல் கட்டப் பயிற்சி வகுப்புக்குரிய அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கூடுதல் காவலர்களை நியமித்து, கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன
என்றார்ஆட்சியர் சி.பழனி. ஆய்வின்போது மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியர் காஜா சாகுல் ஹமீது, பொதுப்பணித்துறைச் செயற்பொறியாளர் பரிதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தமிழரசன், வட்டாட்சியர் கணேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.