விவசாயிகள் பசுந்தாள் உரப் பயிர்களை நடவு செய்ய அறிவுறுத்தல்
பெரம்பலூர் மாவட்ட வேளாண் நிலங்களின் மண்வளத்தை பாதுகாக்கவும், அதிக மகசூல் மூலம் கூடுதல் வருமானம் பெறவும் விவசாயிகள் பசுந்தாள் உரப் பயிர்களை நடவு செய்து பயன்பெறலாம் என வேளாண்மை இணை இயக்குநர் கீதா தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ள மே 14 ஆம் தேதி மாலை 5 மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலில் பசுந்தாள் உரங்களை நமது விவசாயிகள் தொன்றுதொட்டு பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். பொதுவாக எருக்கு, கொழிஞ்சி, அவரை மற்றும் வேம்பு இலைகளை நெல் நடவின்போது வயலில் இட்டு மக்கவைத்து உரமாக பயன்படுத்தினார்.
எனவே, விவசாயிகள் உரத்திற்காக மட்டும் பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிடாவிட்டாலும் சில செடி அல்லது மரங்களின் இலைகளைப் பசுந்தாள் உரமாகப் பயன்படுத்தினார்கள். ரசாயன உரங்கள் உரங்களை நம்பியே நம் நாட்டின் வேளாண்மை இருந்து வந்திருக்கிறது, எனவே பசுந்தாள் உரங்களால், தழைச்சத்து நிலைப்படுத்துவதால் மண்ணில் வளம் பாதுகாக்கப்படுகிறது. இது எளிதில் மட்கும் தன்மை உடையது. மண்ணில் இடுவதால் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் செயல்களை ஊக்குவிக்கிறது. மண்ணில் கட்டமைப்பையும் நன்றாக சீராக்குகிறது.
அதன் மூலம் மண்ணிற்கு அதிக அளவு நீரைத் தக்க வைத்துக் கொள்ளும் திறனை மேம்படுத்துகிறது. பயிருக்கு தேவையான சத்துக்களை மண்ணில் அடிபாகத்தில் இருந்து மேல்பகுதிக்கு கொண்டு வருவதால், மண்ணின் வளம் நீடிக்கப் பயன்படுகிறது. தக்கைப் பூண்டு மணிலா அகத்தி, சனப்பை கொழிஞ்சி, நரிப்பயறு போன்ற பசுந்தாள் உரப் பயிர்களை நடவு செய்து விவசாயிகள் பயன் பெறலாம். என தெரிவித்துள்ளார்.