சாலையில் மைய தடுப்பு அமைக்கும் பணி தீவிரம்

செங்கல்பட்டில் கிராமங்களை இணைக்கு சாலையில் மைய தடுப்பு அமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.

Update: 2023-12-25 13:12 GMT
செங்கல்பட்டு சாலை, 27 கி. மீ. , தொலைவு கொண்டது. இந்த இரு ஊர்களிடையே மடையத்துார், செம்பாக்கம், கொட்டமேடு, வெங்கூர், கரும்பாக்கம், வளர்குன்றம், சென்னேரி, திருவடிசூலம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. கடந்த 2009ம் ஆண்டு, இச்சாலை இரு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டது. பின், திருப்போரூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் வருகை மற்றும் ஜி. எஸ். டி. , சாலைக்கு செல்லும் வாகனங்கள் அதிகரிப்பு காரணமாக, இச்சாலையை நான்கு வழியாக மாற்ற நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. இதையடுத்து, 21 கி. மீ. , வரை, 113 கோடி ரூபாய் செலவில் மழைநீர் கட்டமைப்பு, சிறுபாலங்கள் விரிவுபடுத்துதல், கான்கிரிட் தடுப்புகள் அமைக்கப்பட்டன. மேலும், இச்சாலையில் விபத்தை தடுக்கும் வகையில், சாலையின் நடுவில் மையத் தடுப்பு அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
Tags:    

Similar News