கொசு மருந்து அடிக்கும் பனி தீவிரம்
பள்ளிபாளையம் நகராட்சி உட்பட்ட பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது;
By : King 24x7 Website
Update: 2024-02-04 14:10 GMT
பள்ளிபாளையம் நகராட்சி உட்பட்ட பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகரமன்ற கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வார்டு உறுப்பினர்கள், தங்கள் பகுதியில் அதிகளவு கொசுத்தொல்லை இருப்பதால், டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.எனவே கொசு மருந்து தினந்தோறும் அடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். இதனை அடுத்து நகராட்சியின் பல்வேறு இடங்களில், நகராட்சி பணியாளர்கள் கொசு மருந்து அடிக்கும் பணியை தீவிரமாக செய்து வருகின்றனர்..