பாலக்கரை பகுதியில் தீவிர வாகன சோதனை

தேர்தல் பறக்கும் படையினர் பெரம்பலூர் நகர் பாலக்கரை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Update: 2024-04-02 04:37 GMT

ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர், அளவுக்கு அதிகமான பணம் மற்றும் பொருட்கள் ஏதும் கொண்டு செல்லப்படுகிறது என வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி இரவு 9:30 மணியளவில், செந்தில்குமார் மற்றும் காவலர்கள், அன்னகாமு, ஆனந்தகுமார், செல்வம், ஆகியோர் அடங்கிய பறக்கும் படை குழுவின் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் வரும் கார் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

Tags:    

Similar News