மீன்வளக் கல்லூரியில் பள்ளிகளுக்கிடையேயான வினாடி-வினா போட்டி!

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் பள்ளிகளுக்கிடையேயான வினாடி-வினா போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

Update: 2023-12-08 07:21 GMT

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையேயான வினாடி-வினா போட்டி மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அகிலன், நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தார். வினாடி-வினா போட்டிக்கான ஆரம்ப சுற்றில் எட்டு அணிகள் பங்கேற்றனர். அதிலிருந்து 5 அணிகள் மட்டும் பிரதான சுற்றிற்கு தேர்வு செய்யப்பட்டனர். அறிவியல் கண்காட்சியில் 31 அணிகள் பங்கேற்றனர். பின்னர் நடைபெற்ற நிறைவு விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி, தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். மாணவர் சங்கத்தின் துணைத் தலைவர் பா.பத்மாவதி வரவேற்புரை ஆற்றினார். நிறைவாக அறிவியல் கழக செயலாளர் ஹரிதா கிருஷ்ணன் நன்றியரை ஆற்றினார்.
Tags:    

Similar News