சதுரங்க போட்டி

ராமநாதபுரத்தில் கல்லூரிகளுக்கு இடையிலான சதுரங்க போட்டியில் ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

Update: 2024-01-10 15:21 GMT

ராமநாதபுரத்தில் கல்லூரிகளுக்கு இடையிலான சதுரங்க போட்டியில் ஏராளமான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.  

ராமநாதபுரம் பரமக்குடியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான சதுரங்க போட்டியில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் கீழ் சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் செயல்படும் 11 கல்லூரிகளுக்கு இடையிலான செஸ் போட்டி இன்று பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 66 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்த மாதம் திருச்சியில் நடைபெற உள்ள தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான செஸ் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள் என போட்டி ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News