இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க வட்டார தேர்தல்

திருமருகல் வட்டார இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்க தேர்தலில் புதிய நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டனர்.

Update: 2024-04-26 02:01 GMT

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் 

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் திருமருகல் வட்டார நிர்வாகிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.மாவட்ட பொறுப்பாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற தேர்தலுக்கு தேர்தல் ஆணையர்களாக தமிழ்ச்செல்வன், கலியமூர்த்தி,சங்கரவடிவேல்,வீரபத்திரன் ஆகியோர் செயல்பட்டனர். திருமருகல் வட்டார நிர்வாகிகள் தேர்தலில் தலைவர், செயலாளர்,பொருளாளர்,துணைத் தலைவர்,ஒன்றிய துணைச் செயலாளர்,மகளிர் அணி அமைப்பாளர்கள்,வட்டார செயற்குழு உறுப்பினர்கள்,மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Tags:    

Similar News