தூத்துக்குடியில் சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!
தூத்துக்குடியில் எம். தங்கமாள்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி பசுமைபடை சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடியில் காவல் துறை, மாநகராட்சி தெற்கு மண்டலம், முத்தையாபுரம் காவல் நிலையம், தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் எஸ். செந்தில்வேல் குமார் தலைமையில் நடைபெற்றது.
நியூ பாசக்கரங்கள் முதியோர் இல்ல இயக்குனர் அ. முத்துப்பாண்டியன், பள்ளியின் தலைமை ஆசிரியர் டி.கிருஸ்டி எப்சிபா, அய்யனடைப்பு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆ. ஆதிநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு நிறுவனத் தலைவரும், மாவட்ட பசுமைக்குழு உறுப்பினருமான எம்.ஏ.தாமோதரன் வரவேற்றுப் பேசினார்.
மாநகராட்சி தெற்கு மண்டல உதவி ஆணையாளர் ஆர். கல்யாணசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். எம். தங்கமாள்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி நுலைவு வாயிலில் இருந்து புறப்பட்ட பேரணியானது காமராஜர் மஹால், நான்கு வீதி, துறைமுகம் பிரதான சாலை வழியாக பள்ளியை சென்றடைந்தது.