சர்வதேச  போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஜோதி

கன்னியாகுமரியில் சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது.

Update: 2024-06-26 12:19 GMT

 கன்னியாகுமரியில் சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது. 

கன்னியாகுமரி  காந்திமண்டபம் முன்பு இன்று (26.06.2024) சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு ஜோதி ஓட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலையில்  துவக்கும் நிகழ்ச்சி நடந்தது.       

 சர்வதேச போதை ஒழிப்பு ஜோதி ஓட்டத்தினை கன்னியாகுமரி  காந்தி மண்டபம் முன்பு தொடங்கி வைக்கப்பட்டு, கன்னியாகுமரி, குளச்சல், ஆரல்வாய்மொழி, மார்த்தாண்டம், தென்தாமரைக்குளம், சித்திரங்கோடு, இனையம் குலசேகரம், கருங்கல், இராமன்புதூர்,  புதுக்கிராமம்,  ராஜாவூர்,  ஆசாரிபள்ளம்,  குருசடி, எட்டாமடை, ஆலஞ்சி,  மேல்பாலை, திங்கள்சந்தை, சுங்கான்கடை, முளகுமூடு, தேங்காய்ப்பட்டணம், கடியப்பட்டணம், தக்கலை (வில்லுக்குறி), களியக்காவிளை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய 25 இடங்களிலிருந்து வரும் ஜோதி ஓட்டமானது வடசேரி  அறிஞர் அண்ணா கலையரங்கத்தில் வந்தடையும். சுமார் 750 நபர்கள் இவ்வோட்டத்தில் கலந்துக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர்  ”இளைஞரே! விழித்தெழு.. போதையைத் தவிர்த்திடு!!" எனும் போதைவிழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டார்கள். 

  இந்நிகழ்ச்சியல் உதவி ஆட்சியர் (பயிற்சி)  சுஷ்ஸ்ரீ சுவாங்கி குந்தியா,  கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன்தாஸ்,  கன்னியாகுமரி துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார்,பள்ளி கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News