விழுப்புரம் அரசுக் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி தமிழாய்வுத் துறை சார்பில் அயலக வாழ் தமிழர்களும் பண்பாட்டுப் பதிவுகளும் என்னும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2024-04-10 10:25 GMT

பன்னாட்டு கருத்தரங்கம்

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி தமிழ்த்துறை சார்பில் அயலக வாழ் தமிழர் களும் பண்பாட்டுப் பதிவுகளும் என்னும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் ஒருங்கிணைப்பாளர் குணசேகர் வரவேற்பு ஆற்றினார். தமிழ்த் துறைத் தலைவர் கலைச்செல்வி அறிமுக உரை வழங்கினார்.

அசோகன் நோக்கவுரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் சிவகுமார் தலைமை உரையாற்றினார். மயிலம் ஸ்ரீமத் சிவஞனா பாலய சுவாமிகள், தமிழ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஆய்வுக் கட்டுரை வழங்கிய மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி, மலேசியத் தமிழர் வாழ்வியல் என்னும் தலைப்பில் சிறப்பு உரையாற்றினார்.

தொடர்ந்து கொரியத் தமிழர் பண்பாடு குறித்து தென்கொரியா, சேஜோங் பல்கலைக் கழக உணவு அறிவியல் மற்றும் உயிர் நுட்பவியல், இணைப் பேராசிரியர் ஆரோக்கியராஜ் செல்வராஜ் உரை ஆற்றினார். இந்நிகழ்வில் கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், தமிழ்த்துறை மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக, முனைவர் சுசான் மரி நெப்போலியன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News