திருநாவலுார் ஜோசப் கலைக் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
திருநாவலுார் ஜோசப் கலை அறிவியல் கல்லுாரி மற்றும் கமலா கல்வியியல் கல்லுாரியில், நவீன துறையின் பங்களிப்பு குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.
திருநாவலுார் ஜோசப் கலை அறிவியல் கல்லுாரி மற்றும் கமலா கல்வியியல் கல்லுாரியில், நவீன துறையின் பங்களிப்பு குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி செயலாளர் பிரபாகர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். ஓமன் தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் கார்த்திகே யன் சிறப்புரையாற்றினார்.
கருத்தரங்கில், தட்சசீலா பல்கலை, புதுச்சேரி, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்று, 150க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்தனர். புதுச்சேரி பல்கலைக் கழக பேராசிரியர் சுரேஷ் ஜோசப், வேலுார் தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் கபிலன், பேராசிரியர் கணேஷ் ஆகியோர் ஆய்வு கட்டுரையை மதிப்பீடு செய்தனர்.
சிறந்த ஆய்வு கட்டுரைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. கருத்தரங்கில் தாளாளர் கமலா ஜோசப், முதல்வர் ஏஞ்சல் ஜாஸ்மின் ஷெர்லி, டீன் கதிர்வேல், பேராசிரி யர்கள் சுரேஷ்பாபு, கபிலன், கவாஸ்கர், துணை முதல்வர் வள்ளல்ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.